Sunday, March 9, 2008

என் தந்தை என்னைப்பார்த்து மிகவும் அதிகமாக பாடிய பாடல்

தூங்காதே தம்பி

தூங்காதே - நீயும்

சோம்பேறி என்ற பெயர்

வாங்காதே! (தூங்)


நீ-தாங்கிய உடையும்

ஆயுதமும் - பல

சரித்திரக் கதை சொல்லும்

சிறைக்கதவும்,

சக்தியிருந்தால்

உன்னைக்கண்டு சிரிக்கும்

சத்திரந்தான் உனக்கு

இடம் கொடுக்கும் (தூங்)


நல்ல பொழுதையெல்லாம்

தூங்கிக் கெடுத்தவர்கள்

நாட்டைக் கெடுத்ததுடன்

தானுங்கெட்டார்ந சிலர்

அல்லும் பகலுத்

தெருக்கல்லா யிருந்துவிட்டு

அதிர்ஷடமில்லையென்று

அலட்டிக் கொண்டார்

விழித்துக் கொண்டோரெல்லாம்

பிழைத்துக்கொண்டார் - உன்போல்

குறட்டை விட்டோரெல்லாம்

கோட்டைவிட்டார் (தூங்)


போர்ப் படைதனில் தூங்கியவன்

வெற்றியிழந்தான் - உயர்

பள்ளியில் தூங்கியவன்

கல்வியிழந்தான்!

கடைதனில் தூங்கியவன்

முதல் இழந்தான் - கொண்ட

கடமையில் தூங்கியவன்

புகழ் இழந்தான் - இன்னும்

பொறுப்புள்ள மனிதரின்

தூக்கத்தினால் - பல

பொன்னான வேலையெல்லாம்

தூங்குதப்பா! (தூங்)


தமிழ் திரைப்படம் - நாடோடி மன்னன்(1958)

இயற்றியவர் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்



|Back to Top|

Saturday, March 8, 2008

எல்லாம் என் விதி என்பவர்களுக்காக...

திருக்குறள் pdf வடிவில் இறக்குமதி செய்ய


ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.
திருக்குறள், 620 - ஆள்வினையுடைமை

அம்மா கற்றுக்கொடுத்த முதற்கவிதை

எனதுதாயும் தந்தையும்மிக்க தமிழார்வம் கொண்டவர்களாதலால், எனக்கு சிறு வயதிலிருந்தே நல்ல பல தமிழ் கவிதைகள் கற்ப்பிக்க முயன்றனர். ஆனால் அவர்களின் எல்லா முயர்ச்சியுமே தோல்வியில்தான் முடிந்ததென்று கூறவேண்டும்...
நான் முதன்முதலில் கற்ற கவிதைகள் பாரதியின் கவிதைகளேயாகும்...
அதில் மறக்க முடியாத ஒன்று...


அச்சமில்லை

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே,
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்துநின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
துச்சமாக வெண்ணிநம்மைத் தூறுசெய்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
பிச்சைவாங்கி யுண்ணும்வாழ்க்கை பெற்றுவிட்ட போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
இச்சைகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.

கச்சணிந்த கொங்கைமாதர் கண்கள்வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
நச்சைவாயி லேகொணர்ந்து நண்பரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
பச்சையூ னியைந்தவேற் படைகள் வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
| Back to top |