Saturday, March 8, 2008

அம்மா கற்றுக்கொடுத்த முதற்கவிதை

எனதுதாயும் தந்தையும்மிக்க தமிழார்வம் கொண்டவர்களாதலால், எனக்கு சிறு வயதிலிருந்தே நல்ல பல தமிழ் கவிதைகள் கற்ப்பிக்க முயன்றனர். ஆனால் அவர்களின் எல்லா முயர்ச்சியுமே தோல்வியில்தான் முடிந்ததென்று கூறவேண்டும்...
நான் முதன்முதலில் கற்ற கவிதைகள் பாரதியின் கவிதைகளேயாகும்...
அதில் மறக்க முடியாத ஒன்று...

அச்சமில்லை

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே,
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்துநின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
துச்சமாக வெண்ணிநம்மைத் தூறுசெய்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
பிச்சைவாங்கி யுண்ணும்வாழ்க்கை பெற்றுவிட்ட போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
இச்சைகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.

கச்சணிந்த கொங்கைமாதர் கண்கள்வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
நச்சைவாயி லேகொணர்ந்து நண்பரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
பச்சையூ னியைந்தவேற் படைகள் வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.

No comments:

| Back to top |