Monday, May 18, 2009

பிட்டு கூழான கதை !!!

நான் கான்பூரிலிருந்து வந்த பிறகு, நானும், கார்த்தி அண்ணனும், எங்கள் சென்னை இல்லத்தில், வெகு காலம் பாடு பட்டு, சென்ற வாரம் தான் சமைக்க ஆரம்பித்தோம்... அதற்க்குள், நேற்று முன் தினம், எனக்கு ராகி பிட்டு செய்து சாப்பிட வேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று. பாட்டியின் ஆலோசனை பெறலாமென்று பாண்டிக்கு தொலைபேசியில் அழைத்தால், பாட்டி கல்பனாவை, கார்த்தி அண்ணனின் (எனக்கும்) தங்கை, காண மருத்துவமனை சென்றுள்ளதாக தெரிவித்தார் எனது தந்தை. எனவே, யாருடைய ஆலோசனையுமின்றி, இத்தனை வருடங்களாக நான் பிட்டு சாப்பிட்ட அனுபவத்தையும், கடவுளையும் நம்பி, பிட்டு சமைக்க கீழ்கண்டவாறு முற்பட்டேன்.

முன்னமே வாங்கி வைத்த ராகி பிட்டு மாவை, ஒன்றரை வீசம் படி ஆளந்து தட்டில் கொட்டிக் கொண்டேன். (அப்படியே சாப்பிடுவதற்கல்ல... பொருங்கள்...)

பின், தண்ணீரை சிறுக சிறுக தெளித்தபடி, பிட்டு மாவினை பிசைந்தபடி, கட்டி கட்டாதவாறு உதிர்த்து விட்டேன்.

இனி, என்ன செய்தாலும், மாவு கட்டியாகத்தான் இருக்கும் என்ற நிலை வந்த பிறகு, தண்ணீர் ஊற்றுவதை நிருத்திக்கொண்டேன்.

பிறகு, குக்கரில் (cooker) அளவறிந்து நீரினை ஊற்றி, உதி்ர்த்து விட்ட பிட்டு மாவு உள்ள தட்டினை அந்த குக்கரினுள் வைத்து, மூடியில் வாஷரை பொருத்தி, குக்கரை மூடினேன்.

அடுப்பை தீ மூட்டி, ஆவி வர காத்திருந்தேன்.

ஆவி வந்தபின், வெயிட்டை போட்டு, மூன்று விசில் வந்த பிறகு, தீயை அனைத்து, குக்கரை இறக்கினேன்.

குக்கரை திறந்து பார்த்தால், உள்ளே ஆவி நீராகி, பிட்டு கூழாகியிருந்த காட்சியினைக் கண்டு மனமுடைந்து போனோம் நானும் என் அண்ணனும். இறுப்பினும், ஆசை ஆசையாக செய்த பிட்டாயிற்றே!!! தட்டு நிறைய சர்கரை கொட்டி, மெல்லவம் முடியாமல், மிழுங்கவும் முடியாமல் பிட்டினைத் (கூழினை) திண்று திர்த்தோம்.

மறுநாள், மறுபடியும் பிட்டு செய்யும் முயற்ச்சியில் இறங்கினேன். இந்த முரை பிட்டு மாவு உள்ள தட்டினை மூடிய பின் குக்கரினுள் வைத்தேன்... பூ பூவாக பிட்டு வந்தது... அதில் பாதி சர்கரை கலந்தும், மீதி வெல்லம் கலந்தும் சாப்பிட்டேன். கனவு நினைவானது... ஆனால், பாவம் அண்ணன்தான், கனவுலகத்திலேயே மிதந்து கொண்டுருந்தார்... இரவு 11.30 ஆயற்றே...

சும்மாவா சொன்னாங்க 'முயற்சி யுடையான், இகழ்ச்சி யடையான்' ன்னு...

என்ன தான் முயற்சி இருந்தாலம், என் பாட்டி செய்யும் பிட்டு மாதிரி வரலை.

பாட்டி பிட்டு பாட்டி பிட்டு தான்... அதில், கொஞ்சம் முயற்சியுடன், நிறைய அன்பும் அனுபவமும் இருக்க இல்லையா???...

No comments:

| Back to top |